விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்துறை ஆய்வாளர் சுதாகர் தலைமையில் குற்றப்பிரிவு காவல்துறையினர் வீ.கூட்டுரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தகேத்திற்கு இடமான வகையில் வந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியாதல் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இவர் சின்னசேலம் அருகே உள்ள இந்திலி கிராமத்தைச்சேர்ந்த பழனிச்சாமி என்பதும் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் பிரபல கொள்ளையன் என்பதும் தெரியவந்தது. பின்னர் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தபோது, சின்னசேலம் அருகே ராயர்பாளையம் காட்டுக்கொட்டை வங்கி ஊழியர் வினோத் என்பவரடைய வீட்டில் கடந்த 22ஆம் தேதி மூன்று சவரன் நகையும், அடுத்ததாக 24ஆம் தேதி பாக்கம்பாடி கிராமத்தில் ராமர் என்பவர் வீட்டில் பூட்டை உடைத்து ஏழு சவரன் நகையை கொள்ளையடித்ததையும் ஒப்புக்கொண்டார்.
பின்னர் அவரிடமிருந்து கொள்ளையடித்த 10 சவரன் நகையை பறிமுதல் செய்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.