தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கரோனா பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதையடுத்து பல்வேறு தொழில்களுக்கு நிபந்தனைகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக விழுப்புரம் மாவட்டத்தில் குறைந்திருந்த கரோனா தொற்று எண்ணிக்கை, இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று ஒரே நாளில் நான்கு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்டத்தில் 308ஆக இருந்த பாதிப்பு, தற்போது எண்ணிக்கை 312ஆக உயர்ந்துள்ளது. இதில் இதுவரை 282 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்கள் விழுப்புரம் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை மற்றும் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.