கேட்பாரற்று கிடந்த பண பை: காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெட்டிக் கடை உரிமையாளர் - கள்ளக்குறிச்சி மாவட்டச் செய்திகள்
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூரில் பெட்டி கடையில் கேட்பாரற்று கிடந்த பண பையை கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
![கேட்பாரற்று கிடந்த பண பை: காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெட்டிக் கடை உரிமையாளர் -thirukovilur-police](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6068713-thumbnail-3x2-l.jpg?imwidth=3840)
-thirukovilur-police
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே பெட்டிக் கடை வைத்து நடத்தி வருபவர் வாசுதேவன்(45). இன்றிரவு 8 மணியளவில் வழக்கம்போல் அவர் கடையை பூட்டியுள்ளார். அப்போது கடையின் வாசல்படியில் தாம்பூலப்பை ஒன்று இருந்துள்ளது.
அதை திறந்து பார்த்த அவர், அதில் ரூ.40 ஆயிரம் பணமிருப்பதை அறிந்தார். உடனே அவர், திருக்கோவிலூர் காவல் நிலையம் சென்று நடந்ததைக் கூறி பண பையை அங்கு ஒப்படைத்தார். அதனை வாங்கிக்கொண்ட உதவி ஆய்வாளர் குணபாலன், யாரோ தவறவிட்ட பண பையை நேர்மையாக ஒப்படைத்த வாசுதேவனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருக்கோவிலூர் காவல் நிலையம்
இதையும் படிங்க: சாலையில் கிடந்த பணப்பை; உரிய நபரிடம் ஒப்படைத்தவருக்கு எஸ்.பி பாராட்டு!