தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதைத்தொடர்ந்து கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க, அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. இதற்கிடையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மேலும் 50 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சையளிக்கும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த விழுப்புரம் சிங்காரத்தோப்புப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இவரது ரத்த மாதிரி முடிவுகள் அனுப்பப்பட்டதில், அவருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிருந்ததாகத் தமிழ்நாடு சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 411 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.