கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழப்புத்தொடர்பான வழக்கு விசாரணை தற்போது சிபிசிஐடி வசம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த காரணங்களுக்காக, ஜிப்மர் ஆய்வறிக்கையை வழங்க இயலாது என விழுப்புரம் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மாணவியின் தந்தை சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜிப்மர் ஆய்வு அறிக்கை முடிவுகள் தங்களுக்கு வேண்டும் என மனு தாக்கல் கொடுக்கப்பட்டுள்ளது.
இம்மனு மீதான விசாரணை வரும் 29ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற அமர்வு பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வர இருக்கிறது. மனு மீதான ஜிப்மர் அறிக்கையை பெற்றுக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தால் விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜிப்மர் ஆய்வறிக்கை தங்களுக்கு வேண்டும் என முறையாக மனு அளித்து, ஜிப்மர் ஆய்வு அறிக்கையினை பெற்றுக்கொள்ளலாம் என நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.
மேலும் கள்ளக்குறிச்சி தலைமை அரசு பொது மருத்துவமனையில் நடந்த முதல் மற்றும் இரண்டாவது உடற்கூராய்வு அறிக்கை விவரம் மற்றும் விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல் துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் நகல் மாணவியின் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதன் பேரில் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி