விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஆர்.எஸ் பிள்ளை வீதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக துணை கண்காணிப்பாளர் கணேசனுக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், உதவி ஆய்வாளர் ஆனந்தராசன் தலைமையிலான காவலர்கள் ஆர்.எஸ் பிள்ளை வீதியில் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஹகமத்துல்லா (39) என்பவர் மளிகைக் கடையில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து, ஒரு லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து, சஞ்சீவிராயன் பேட்டையைச் சேர்ந்த ஹகமதுல்லா, பொன்னி நகரைச் சேர்ந்த ஜெயராமன் (52) ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மினி லாரியில் கடத்தி வரப்பட்ட 2 டன் குட்கா: 2 பேர் கைது