விழுப்புரம்: ஊரக உள்ளாட்சி அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் முன்னாள் முதலமைச்சரும் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று (அக்.03) நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர் மணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ”தமிழ்நாட்டில் ஆளுகின்ற அரசு மக்களைப் பற்றி சிந்திக்காத அரசு, ஆனால் அதிமுக அரசு மக்களைப் பற்றி சிந்திக்கக் கூடிய அரசு. அதிமுக கட்சி தூய தொண்டர்களை அடையாளப்படுத்தும் கட்சி.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அவர்கள் வெற்றியினை வருகின்ற 16ஆம் தேதி அதிமுகவின் ஐம்பதாவது ஆண்டு பொன்விழாவில் காணிக்கையாக்க வேண்டும். அப்படி என்றால் இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், ”கடந்த 2011ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற புரட்சித்தலைவி ஜெயலலிதா, 52 விழுக்காடு நிதியை பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்து மக்களுக்கான திட்டத்தை செயல்படுத்தினார்.
கடலூர் மாவட்டத்தில் தற்போதைய ஆளும் கட்சியின் எம்பி, ஒருவரை அடித்தே கொலை செய்துள்ளார். அவர் மீது எந்த ஒரு வழக்கும் பதியப்படவில்லை, பத்திரிகையிலும் பெரிதாக வரவில்லை" எனவும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க:நாட்டின் சிறந்த முதலமைச்சர் ஸ்டாலின் - குலாம் நபி ஆசாத் புகழாரம்