விழுப்புரம்: கும்பகோணத்தில் இருந்து பயணிகளுடன் காஞ்சிபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, அதிகாலை அகரம் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 பயணிகள் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த நேரத்தில் பேருந்தின் டீசல் டேங்க் சேதமடைந்து டீசல் வெளியேறியதால் தீ பற்றும் அபாயம் ஏற்பட்டது. இதனால் தீயணைப்பு வீரர்கள் பேருந்தின் மீதும் சாலையிலும் தண்ணீரை அடித்து முன்னெச்சரிக்கையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டி வந்தது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: சீனாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 27 பேர் உயிரிழப்பு