விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நாகலாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகள் பிரேமலதா, ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று (ஜன.3) சிறுமி தனது தம்பியுடன் கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது அவர் கிணற்றில் தவறி விழுந்தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, சிறுமி கிணற்றுக்குள் மூர்ச்சையற்ற நிலையில் காணப்பட்டார். மேலும் இது குறித்து அங்கிருந்தவர்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் விழுந்த பிரேமலதாவை சடலமாக மீட்டனர். தொடர்ந்து காவல் துறையினர் சிறுமியின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ராமநாதபுரம் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி!