இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் ஆண்டுதோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டம் அய்யன் கோவில்பட்டு பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
மயில், அன்னம், சிங்கம், மான், மாடு, குதிரை, தாமரை போன்றவற்றின் மீது விநாயகர் அமர்ந்திருப்பது, நர்த்தன விநாயகர், சிங்க விநாயகர், நந்தி விநாயகர் உள்ளிட்ட பலவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு அடிமுதல் 15 அடிவரை உயரமுள்ள விநாயகர் சிலைகள் பல்வேறு அலங்காரங்களில் தயாரிக்கப்படுகிறது.