ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து அட்டை புதுப்பிக்கும் தேதி அறிவிப்பு! - மாற்றுத்திறனாளிக்களுக்கான இலவச பேருந்து அட்டை புதுப்பிக்கும் தேதி அறிவிப்பு

விழுப்புரம்: பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து அட்டையைப் புதுப்பிக்கும் முகாம் மார்ச் 26, 27 ஆகிய இரு தேதிகளில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Free Bus pass Renewal Date Notice for disabled person

author img

By

Published : Mar 9, 2020, 11:36 PM IST

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக வழங்கப்படும், பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் அரசுப் பேருந்துகளில் கட்டணம் ஏதுமின்றி மாவட்டம் முழுவதும் சென்று வருவதற்கான இலவச பேருந்து பயண அட்டை ஒவ்வொரு நிதியாண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2020-2021ஆம் நிதியாண்டுக்கு இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்கும் முகாம் வருகிற 26, 27 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், விழுப்புரம் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இலவச பேருந்து பயண அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் மேற்படி நாள்களில் நடைபெறவுள்ள முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், மார்பளவு புகைப்படம் 2, இலவச பேருந்து பயண அட்டை அசல் மற்றும் நகல் ஆகியவைகளுடன் கலந்துகொண்டு இலவச பேருந்து பயண அட்டையைப் புதுப்பித்து பயனடைந்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'விரைவில் தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.