விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு விழுப்புரம் மட்டுமின்றி அருகிலுள்ள கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக தினமும் வந்து செல்கின்றனர்.
தற்போது கரோனா சிறப்பு மருத்துவ சிகிச்சையும் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவக் கல்லூரியில் உள்ள உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீ மற்ற இடங்களுக்குப் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இது குறித்து சோதனை செய்த தீயணைப்பு துறையினர், மின் கசிவின் காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டது என்பதை உறுதிசெய்தனர்.
இதையும் படிங்க: செங்குன்றம் அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் குடோனில் தீ விபத்து!