ETV Bharat / state

பஞ்சு குடோனில் தீ விபத்து...! பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் நாசம் - பஞ்சு குடோனில் தீ விபத்து

விழுப்புரம்: தனியாருக்குச் சொந்தமான பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.

Fire accident in private cotton godown
பஞ்சு குடோனில் தீ விபத்து
author img

By

Published : Jun 30, 2020, 3:26 PM IST

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே தனியாருக்குச் சொந்தமான பஞ்சு குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பஞ்சு குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், பற்றி எரிந்த தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு உள்ளிட்ட இதர பொருள்கள் எரிந்து நாசமாகின.

Fire accident in private cotton godown
தீ விபத்தில் நாசமான பஞ்சு

இதையடுத்து இந்த தீ விபத்தானது மின்கசிவு காரணமாக ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய இரு அரசு அலுவலர்களுக்கு 4 ஆண்டு சிறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.