விழுப்புரம்: அதிமுக ஆட்சியின் போது, அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்பி-க்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி மீதும், அதற்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி மீதும், விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று (டிசம்பர் 16) விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் சிறப்பு டிஜிபியும், முன்னாள் எஸ்.பி.யும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதற்கான காரணங்களை அவா்களது வழக்கறிஞா்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.
மேலும் அரசு தரப்பு சாட்சியான தொழிலதிபா் தேவராஜன் நீதிமன்றத்தில் ஆஜராகி, சாட்சியம் அளித்தாா். அவரிடம் முன்னாள் சிறப்பு டிஜிபியின் வழக்கறிஞா், குறுக்கு விசாரணை செய்தாா். இதையடுத்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வருகிற 20ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதி அரசர் புஷ்பராணி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவனை சாதி பெயர் சொல்லி அடித்த பெண்கள் - அரசின் நடவடிக்கை என்ன?