ETV Bharat / state

விழுப்புரத்தில் மகன் உயிரிழந்ததைக் கேட்ட தந்தையும் மரணம்!

விழுப்புரம்: வாகன விபத்தில் மகன் உயிரிழந்த தகவல் கேட்டு தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

வாகனவிபத்தில் மகன் உயிரிழந்த தகவல் கேட்டு தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு

author img

By

Published : Sep 24, 2020, 10:27 PM IST

புதுச்சேரி திருபுவனை பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம். இவரது மகன் உத்ரகுமார் தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்துவருகிறார். இவர் பள்ளிநேளியனூர் அருகிலுள்ள ரயில்வேகேட் பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

இந்நிலையில் இன்று (செப். 24) புதுச்சேரி, தமிழ்நாடு எல்லைப் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று இவர் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து மகன் உயிரிழந்த தகவல் கேட்ட தந்தை விநாயகமும் மாரடைப்பில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

மகன் இறந்த செய்தியைக் கேட்ட தந்தையும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க...12ஆம் வகுப்பு மறுதேர்வர்களின் முடிவுகள் அக்.10ஆம் தேதி வெளியாகும் - சிபிஎஸ்இ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.