ETV Bharat / state

வீணாக கடலில் கலக்கும் தண்ணீர் - இடிந்து விழுந்த தடுப்பணை கட்டித்தர விவசாயிகள் கோரிக்கை - collapsed Dam

விழுப்புரம் அருகே கடந்தாண்டு கட்டப்பட்ட தளவானூர் தடுப்பணை இடிந்து விழுந்த நிலையில் தற்போது தண்ணீர் வெளியேறி கடலில் கலப்பதால் விரைவில் தடுப்பணையை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தளவானூர் தடுப்பணை
தளவானூர் தடுப்பணை
author img

By

Published : Oct 27, 2021, 10:25 PM IST

விழுப்புரம் - கடலூர் மாவட்ட எல்லையில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 25.37 கோடி ரூபாயில் தளவானூர் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த அணை, சில மாதங்களிலேயே இடிந்து விழுந்தது.

இந்த தடுப்பணையை மீண்டும் கட்டித்தர விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது மழை பெய்து வருவதாலும், சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஆனால், தடுப்பணை உடைந்த காரணத்தால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் தடுப்பணை திறக்கப்படாததால் தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடலில் கலக்கும் தண்ணீர்

கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று உடைப்பு ஏற்பட்ட அணைக்கட்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் பணிகள் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை தடுப்பணை சீரமைக்கப்படாமல் தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

அடுத்த ஒரு சில நாள்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் தண்ணீர் முழுவதும் கடலில் சென்று கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு விரைவில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: 13 மாதங்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.