விழுப்புரம்: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புத் துறை முலமாக நடைபெறும் எழுத்துத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளில் இன்று நடைபெற்றது. இந்நிலையில் விழுப்புரத்தில் டிஎன்பிஎஸ்சி (Group 4) தேர்விற்காக ஐந்து நிமிடம் தாமதமாக வந்தவர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மையதித்தின் முன்னே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாதா கோயில் அருகேவுள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு 10 தேர்வர்கள் ஐந்து நிமிடம் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. காலதாமதம் ஆகிவிட்டதால் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என தேர்வு மையத்திற்கு வெளியே நின்ற காவலர்கள் கூறியுள்ளனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, விழுப்புரம் அருகேவுள்ள வளவனூர் பகுதியைச் சேர்ந்த பிரியா என்கிற பெண்மணி தன்னை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்றால் நான் ஸ்ரீமதி போன்று தற்கொலை செய்து கொள்வேன் என கூறி பள்ளியில் முகப்பு வாயிலை தள்ளி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: குரூப் 4 தேர்வு: பாஸ் என்ற பாஸ்கரன் பட காமெடி போன்ற சம்பவம்