விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதிகளின் தேர்தல் செலவின மேற்பார்வையாளராக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நரசிம்குமார் கால்கே பணியாற்றி வந்தார். கடந்த சில நாள்களாக உடல் சோர்வால் அவதிப்பட்டு வந்த நரசிம்குமார் கால்கேவுக்கு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இப்பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து நரசிம்குமார் கால்கேவின் உதவியாளர்கள், பாதுகாப்பு அலுவலர்கள் ஆகியோர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
பின்னர் சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவனைக்கு நரசிம்குமார் கால்கே சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவருடன் பணியாற்றிய அலுவலர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் சொந்த மண்ணில் தொடரை வென்ற இந்தியா!