ETV Bharat / state

’கரோனா தடுப்பூசி கையிருப்பை உறுதி செய்யவேண்டும்’ -  விழுப்புரம் எம்பி வேண்டுகோள் - VCK General Secretary Ravi Kumar

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு மட்டுமே சுமார் 10 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுவதாகவும், எனவே தேவையான அளவில் தடுப்பூசிகள் வழங்குமாறும் விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா தடுப்பூசி கையிருப்பை உறுதி செய்யவேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்

author img

By

Published : Apr 17, 2021, 5:18 PM IST

விழுப்புரம்: கரோனாவின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும், இக்கரோனா வைரஸ் உருமாறிய கரோனாவாகவும் மாறி மக்களை வெகுவாக பாதிப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனால் தடுப்பூசிகளின் தேவையும் மக்கள் மத்தியில் பெருகிக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், விழுப்புரம் மக்களவை உறுப்பினரும், விசிக பொதுச் செயலாளருமான ரவிக்குமார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் வைத்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தடுப்பூசி பற்றாக்குறை

"தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில், ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவது என்ற இலக்கை எட்டுவது சாத்தியமாகத் தெரியவில்லை.

இதுவரை 15 விழுக்காடு அளவுக்கே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு மட்டுமே சுமார் 10 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.

இந்த மாவட்டங்களுக்குத் தேவையான அளவில் தடுப்பூசி வழங் வேண்டும்” என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் இன்று (ஏப். 17) தொலைபேசி வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: 'புதுச்சேரியில் ஒரே நாளில் 715 பேருக்கு கரோனா தொற்று உறுதி'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.