விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூா் அருகே ஏனாதிமங்கலம் ஊராட்சியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழமையான எல்லீஸ் தடுப்பணையில் சேதமடைந்த பகுதிகளை அமைச்சா் பொன்முடி இன்று ஆய்வு செய்து தரமாக கட்டித்தரப்படும் என உறுதியளித்துள்ளார்.
பின்னர் தொடர்ந்து பேசிய அவர், ”கடந்தாண்டு பெய்த கன மழையால் தடுப்பணை சேதமானது. தடுப்பணையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு கேட்டு அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
கோரிக்கையின் அடிப்படையில், சீரமைப்புப்பணிகளுக்காக ரூ.1.30 கோடி நிதி அரசால் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியைக் கொண்டு முழுமையாகப்பணிகளை மேற்கொள்ள முடியாது. எனவே, கூடுதலாக ரூ.1.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தர முதலமைச்சரிடம் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது .
அவசரமாகப்பணிகளை மேற்கொண்டால், மீண்டும் பழுது ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், சீரமைப்புப் பணிகளை முறையாக செய்யத்திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இதே பகுதியில் ரூ.75 கோடியில் புதிய தடுப்பணை அமைப்பதற்கான திட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சாத்தனூா் அணையிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீா் வீணாக கடலில் சென்று கலப்பதைத் தடுக்கும் வகையில், தண்ணீா் செல்லும் வழித்தடங்களில் உள்ள சிறு சிறு கால்வாய்களின் வழியே நீரைப்பெற்று விவசாயப்பயன்பாட்டுக்கு பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் விவசாயிகள் இதனைப்புரிந்து கொள்ள வேண்டும். அவசரப்பட வேண்டாம், கொஞ்சம் பணி தாமதமானாலும் தரமாக தடுப்பணை கட்டித்தரப்படும்”, எனத் தெரிவித்துள்ளார்.
-
விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் அணையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன்.https://t.co/EUkNZA0XRo pic.twitter.com/YU7YOkJeaA
— Dr.K.Ponmudy (@KPonmudiMLA) August 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் அணையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன்.https://t.co/EUkNZA0XRo pic.twitter.com/YU7YOkJeaA
— Dr.K.Ponmudy (@KPonmudiMLA) August 11, 2022விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் அணையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன்.https://t.co/EUkNZA0XRo pic.twitter.com/YU7YOkJeaA
— Dr.K.Ponmudy (@KPonmudiMLA) August 11, 2022
1950ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தடுப்பணை 70 ஆண்டு கால பழமை வாய்ந்ததாகும். இந்தத் தடுப்பணையின் மூலம் மழைநீா் சேகரிப்பட்டு, பல்வேறு கிராமங்களுக்குத் தேவையான குடிநீா், விவசாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கும்பக்கரை அருவியில் 15 நாட்களுக்குப்பிறகு சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி