விழுப்புரம் தொகுதி திமுக சட்டப்பேரவை வேட்பாளர் ரா. லட்சுமணன் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, “விழுப்புரம் சட்டப்பேரவை உறுப்பினரான பின் புதிய பேருந்து நிலையத்தை சரி செய்வேன். விழுப்புரம் நகரத்தை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மாற்ற நடவடிக்கை எடுப்பேன். பாதாள சாக்கடைத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படும். டாக்ஸி, மினிவேன் ஓட்டுநர்களுக்கு நிரந்தரமாக வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்துதரப்படும்.
அனைத்து கிராமங்களிலும் நூலகங்கள், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். தண்ணீர்ப் பஞ்சம் இல்லாத தொகுதியாக மாற்றப்படும். குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்படும். அமைச்சர் சி.வி.சண்முகத்தின் செயல்பாடு அநாகரீகமான முறையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அவர்கள் பணத்தை மட்டுமே நம்பி அரசியலில் உள்ளனர். கொள்ளைக்காரர்களுக்கும், கொள்கைக்காரர்களுக்கும் இடையே நடக்கும் தேர்தல் இது. ஆளுங்கட்சியினர் பணப் பட்டுவாடா செய்வது உள்ளிட்ட பல்வேறு புகார்களைத் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்களை விலை கொடுத்து வாங்க முடியாது. மக்கள் ஏப்ரல் 6ஆம் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்” என்றார்.
இதையும் படிங்க: ஆட்டோவில் சென்ற ஸ்மிருதி இராணிக்கு ஆரத்தி