அரங்கண்டநல்லூர் அருகே வீரபாண்டி கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவில் தேர் திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சித்திரை மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற திருவிழாவுக்கு பின்னர் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விழா நடைபெறாமல் இருந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் திருத்தேர் திருவிழா நேற்று (ஏப்ரல் 18)நடைபெற்றது.
அப்போது 32 அடி உயரத்தில் கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனுடன் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 32 அடி உயரத்துடன் 16 டன் எடை கொண்ட தேரை 360 பேர் தங்களது தோள்களில் சுமந்த படி வீதி உலா வரும் நிகழ்ச்சி மிக கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.