ETV Bharat / state

நிரூபித்தால் அரசியலைவிட்டே விலகத் தயார்... நீங்கள்? - பொன்முடி சவால்! - dmk mla pomudi

விழுப்புரம்: திமுகவினர் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என திமுகவின் மூத்தத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான க. பொன்முடி கூறியுள்ளார்.

dmk mla pomudi challanged minister kamaraj for ondrinaivom vaa scheme issue

author img

By

Published : May 30, 2020, 3:34 PM IST

விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் க. பொன்முடி, "திமுக சார்பில் 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களை நேற்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்தோம். தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ், 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம் திமுக அரசியல் செய்வதாக கூறியிருந்தார்.

உண்மையிலேயே அரசியல் செய்வது அதிமுகவினர்தான். திமுகவினர் பொய் விண்ணப்பங்களை அளிப்பதாக அமைச்சர் காமராஜ் கூறியிருந்தார். இதற்குச் சாட்சியாக நான்கு நபர்களின் பேட்டிகளையும் அவர் வெளியிட்டிருந்தார்.

பேட்டி கொடுத்தவர்கள் குறித்து திமுக சார்பில் விசாரணை செய்யப்பட்டதில் இருவர் விழுப்புரம் அதிமுக நிர்வாகியின் உறவினர் எனத் தெரியவந்ததுள்ளது.

இவர்களில் ஒருவர் தனது பெயரை மாற்றி பொய்யான பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளோம்.

dmk mla pomudi challanged minister kamaraj for ondrinaivom vaa scheme issue
பொய்யான பேட்டி அளித்தவர்கள்

நீங்கள் வெளியிட்டுள்ள காணொலியில் இருப்பவர் வண்டிமேடு பகுதியைச் சேர்ந்த இதயத்துல்லா என நிரூபித்துவிட்டால் நான் அரசியலைவிட்டே விலகத் தயார். தவறினால் நீங்கள் விலகத் தயாரா? உணவுத் துறை அமைச்சர் காமராஜ் இந்தச் சவாலை ஏற்பார் என நம்புகிறேன்" என்றார்.

இதையும் படிங்க: ஸ்டாலின் அரசியல் நாடகம் ஆடுகிறார்- அமைச்சர் காமராஜ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.