ETV Bharat / state

அமைச்சர்கள் சூசக பேச்சு; பாதியில் கிளம்பிய திமுக எம்எல்ஏ, எம்.பி.! - எம்.பி கௌதம சிகாமணி

விழுப்புரம்: கோடை விழாவில் அமைச்சர்களின் சூசக பேச்சால் திமுக எம்எல்ஏ, எம்.பி. வாக்குவாதத்தில் ஈடுபட்டு பாதியில் வெளியேறினர்.

திமுக
author img

By

Published : Jul 14, 2019, 12:42 PM IST

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன் மலையில் உள்ள கரியாலூர் கோடை விழா அரங்கத்தில் 23ஆவது கோடை விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை தொடங்கிவைத்தனர்.

இவ்விழாவிற்கு சங்கராபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் (திமுக) உதயசூரியன், கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் கவுதம சிகாமணி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது உரையாற்றிய உதயசூரியன் கல்வராயன் மலையில் உள்ள மலைவாழ் மக்களை வனத் துறையினரும் காவல் துறையினரும் அச்சுறுத்துவதாகவும், அவர்களின் இயந்திரங்களை பறிமுதல் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

அதன் பிறகு பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திமுக எம்எல்ஏ உதயசூரியன் மக்களின் நலனில் அக்கறையுடன் உள்ளார். ஆனால் அவர் வைத்த கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றிதான்வருகிறது. அவர் மேடையில் கைத்தட்டல் வாங்க வேண்டும் என பொதுமக்கள் முன் பேசுகிறார் என்றார்.

திமுக எம்எல்ஏ, எம்.பி. வெளியேறிய காட்சி

இதனையடுத்து பேசிய வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திரைப்படத்தின் பெயரை வைத்து திமுக எம்எல்ஏவை சூசகமாக பேசினார். இதனால் மேடையில் அமர்ந்திருந்த திமுக எம்எல்ஏ உதயசூரியன் ஆத்திரமடைந்து மாவட்ட ஆட்சியரிடத்தில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு விழாவிலிருந்து எம்.பி. கவுதம சிகாமணியுடம் கிளம்பிச் சென்றார். இச்சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Intro:tn_vpm_01_kodaivizha_ministers_vis3_tn10026Body:tn_vpm_01_kodaivizha_ministers_vis3_tn10026Conclusion:கோடைவிழாவில் அமைச்சர்கள் சூசக பேச்சால் திமுக எம் எல் ஏ மற்றும் எம் பி வாக்கு வாதத்துடன் வெளியேரினர் !

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன் மலையில் உள்ள கரியாலூர் கோடை விழா அரங்கத்தில் 23 வது கோடை விழா விமர்சையாக நடைபெற்றது இதில் வனத்த துறை அமைச்சர் திண்டுக்கல் சீனீவாசன் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு விழா வை துவக்கி வைத்தனர்.இவ்விழாவிற்க்கு சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் (திமுக) உதய சூரியன் மற்றும் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் கவுதம சிகாமணி ஆகியோர் கலந்து கொண்டனர் அப்போது முன்னிலை உரையாற்றிய சங்கராபுரம் சட்ட மன்ற உறுப்பினர் உதய சூரியன் கல்வராயன் மலையில் உள்ள மலைவாழ் மக்களை வன துறையிநரும் காவல் துறையினரும் அச்சுருத்துவதாகவும் ,அவர்களின் இயந்திரங்களை பறிமுதல் செய்வதாக குற்றசாட்டி பேசினார் .பிறகு பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திமுக சட்ட மன்ற உறுப்பினர் உதய சூரியன் மக்களின் நலனில் அக்கரையுள்ளார் .ஆனால் அவர் வைத்த கோறிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தான் வருகிறது அவர் மேடையில் கை தட்டல் வாங்க வேண்டும் என பொதுமக்கள் முன் பேசுகிறார் எனவும் அடுத்ததாக வனதுறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திரை படத்தில் பெயரை வைத்து திமுக எம் எல் ஏ வை சூசகமாக பேசினார் இதனால் மேடையில் அமர்ந்திருந்த திமுக எம் எல் ஏ உதய சூரியன் ஆத்திரமடைந்து மாவட்ட ஆட்சியரிடத்தில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு மேடையை விட்டு எம் பி கவுதம சிகாமணியுடம் கிளம்பி சென்றார் .அப்போது பேசிய அமைச்சர் சட்ட சபை என நினைத்து கதையை கிளப்பி கிளம்பி செல்கிறார் என கூறியுள்ளார் .இச்சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது...
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.