ETV Bharat / state

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!

author img

By

Published : Sep 30, 2019, 2:45 PM IST

Updated : Sep 30, 2019, 3:10 PM IST

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

திமுக

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23ஆம் தேதி தொடங்கி இன்று நண்பகல் மூன்று மணியுடன் முடிவடைந்தது.

இதுவரை அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி, இந்திய குடியரசுக் கட்சி வேட்பாளர் ரவிக்குமார், தமிழ் பேரரசு கட்சியின் நிறுவனரும் இயக்குநருமான கௌதமன், அகில பாரத இந்து மகா சபையின் வேட்பாளர் முருகன், சுயேச்சை வேட்பாளர்கள் அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன், அரசன், ராஜா, தங்கராசு ஆகிய ஒன்பது பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று திமுக வேட்பாளர் புகழேந்தி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக விக்கிரவாண்டி நகரப் பகுதியில் ஊர்வலமாக திமுகவினர் வந்தனர். அதையடுத்து விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அவருடன் திமுக முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மக்களவை உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், ரவிக்குமார், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுகவினர், "திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் ஆதரவுடன் எங்கள் வேட்பாளர் வெற்றிபெறுவார். ஆளுங்கட்சி அவலங்களை எடுத்துக் கூறி மக்களிடம் வாக்கு சேகரிப்போம். எதிர்க்கட்சியின் வியூகங்களை நாங்கள் திறம்பட எதிர்கொள்வோம். எங்கள் வேட்பாளர் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்" என்று நம்பிக்கைத் தெரிவித்தனர்.

இதையும் படிக்கலாமே: 'அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்பணைகள் எத்தனை?' - துரைமுருகன் கேள்வி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

இதையடுத்து இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. 

இதுவரை சுயேட்சை வேட்பாளர்கள் அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன், அரசன், ராஜா, தங்கராசு மற்றும் இந்திய குடியரசுக் கட்சி வேட்பாளர் ரவிக்குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி, தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும் இயக்குனருமான கௌதமன், அகில பாரத இந்து மகா சபையின் வேட்பாளர் முருகன், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் ஆகிய 9 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று திமுக வேட்பாளர் புகழேந்தி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக விக்கிரவாண்டி நகரப் பகுதியில் ஊர்வலமாக வந்த திமுகவினர், விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அவருடன் திமுக முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், ரவிக்குமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்., "திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் மக்கள் ஆதரவுடன் எங்கள் வேட்பாளர் வெற்றி பெறுவார். ஆளுங்கட்சி அவலங்களை எடுத்துக் கூறி மக்களிடம் வாக்கு சேகரிப்போம். எதிர்கட்சியின் வியூகங்களை நாங்கள் திறம்பட எதிர்கொள்வோம். எங்கள் வேட்பாளர் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்றார்.

Last Updated : Sep 30, 2019, 3:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.