ETV Bharat / state

தேசிய இளைஞர் விழாவையொட்டி விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள்

விழுப்புரம்: 23ஆவது தேசிய இளைஞர் விழாவையொட்டி, மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள், இன்று நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

District selection competitions at National Youth Festival
District selection competitions at National Youth Festival
author img

By

Published : Dec 30, 2019, 12:42 PM IST

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள நேரு யுவ கேந்திரா அலுவலகம் அருகில், இந்திய செஞ்சிலுவை சங்க கூட்டரங்கில் இன்று காலை 9:30 மணியளவில் தேர்வு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இரு பாலரும் போட்டிகளில் பங்கேற்கலாம்.

இதில் நாட்டுப்புற நடனம், நாட்டுப்புற பாட்டு, ஓரங்க நாடகம் (ஆங்கிலம், இந்தி), கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி சங்கீதம், பேச்சுப்போட்டி, ஹார்மோனியம், மிருதங்கம், புல்லாங்குழல், வீணை, சிதார், கிடார், தபேலா, மணிப்புரி நடனம், பரதநாட்டியம், குச்சிப்புடி, கதக், ஒடிஸி ஆகியவற்றிற்கு தேர்வு போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதற்கான விதிமுறைகள் :

  • அனைத்துப் போட்டிகளும் காலை 9.30 மணிக்கு தொடங்கப்படும்.
  • தாமதமாக வருபவர்களைப் பங்கேற்க அனுமதிக்க இயலாது.
  • பிறப்புச் சான்றிதழின் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஒரு நபர் ஒரு பிரிவில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்.
  • மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அளவிலான தேர்வு போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
  • மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் அடுத்தாண்டு ஜனவரி 6ஆம் தேதி திருச்சியில் நடைபெறும்.
  • 23ஆவது தேசிய இளைஞர் விழா உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அடுத்தாண்டு ஜனவரி 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு,

மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,

மாவட்ட விளையாட்டு அரங்கம்,

விழுப்புரம் (தொலைபேசி எண்: 7401703485). என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: துப்பாக்கிச் சுடுதலில் தேசிய பதக்கம் - மதுரை மாணவர் சாம் ஜார்ஜ் சாதனை

Intro:விழுப்புரம்: 23வது தேசிய இளைஞர் விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் நாளை (திங்கட்கிழமை) விழுப்புரம் செஞ்சிலுவை சங்க கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.Body:இதுத்தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை
வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது.,

'விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 15 முதல் 29 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிருக்கான மாவட்ட அளவிலான தேசிய இளைஞர் தேர்வு போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விழுப்புரம் மாவட்ட பிரிவின் சார்பாக தேர்வுப் போட்டிகள் நேரு யுவகேந்திரா அமைப்புடன் இணைந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நேரு யுவகேந்திரா அலுவலகம் அருகில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்க கூட்ட அரங்கில் காலை 9.30 மணி முதல் நடைபெற உள்ளது.

இதில் நாட்டுப்புற நடனம், நாட்டுப்புற பாட்டு, ஓரங்க நாடகம், (ஆங்கிலம், இந்தி) கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி சங்கீதம், பேச்சுப்போட்டி, ஹார்மோனியம், மிருதங்கம், புல்லாங்குழல் வீணை, சிதார், கிடார், தபேலா, மணிப்புரி நடனம், பரதநாட்டியம், குச்சிப்புடி, கதக் மற்றும் ஒடிஸி நடனங்களுக்கு தேர்வு போட்டிகள் நடைபெற உள்ளது.

இதற்காக பின்வருமான விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது:

# அனைத்து போட்டிகளும் காலை 9.30 மணிக்கு துவங்கப்படும்.

# தாமதமாக வரும் ஆடவர் மற்றும் மகளிர் பங்கேற்க அனுமதிக்க இயலாது.

# 15 முதல் 29 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

# பிறப்புச் சான்றிதழ் நகல் சமர்ப்பிக்க வேண்டும்.

# ஒரு நபர் ஒரு பிரிவில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

# மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அளவிலான தேர்வு போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

# மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் அடுத்தாண்டு ஜனவரி 6ஆம் தேதி திருச்சியில் நடைபெறும்.

# 23 வது தேசிய இளைஞர் விழா உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் அடுத்தாண்டு ஜனவரி 12 ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Conclusion:மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அரங்கம் விழுப்புரம், (தொலைபேசி எண்: 7401703485) முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

(இந்த செய்திக்கு கோப்புப்படம் பயன்படுத்தி கொள்ளவும்)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.