விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் அன்றாடம் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும் மற்றும் பேருந்து நிலையத்தின் உட்புற கட்டமைப்புகளையும், கட்டண கழிவறைகள் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறைகள், பேருந்து நிலையத்தின் மழைநீர் மற்றும் கழிவு நீரை வெளியேற்றும் கால்வாய்கள், பேருந்து நிலைய மேற்கூரை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கழிவறைகளில் இரும்புக் கதவுகள் அமைக்கவும், நோய் தடுப்பு மருந்துகளை தினந்தோறும் காலை - மாலை வேளைகளில் கழிவறையினை சுற்றி தெளித்து சுத்தமாக பராமரிக்க அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் உள்ள கடை உரிமையாளர்களை அழைத்து அறிவுரை கூட்டம் நடத்தியதோடு, திறந்தவெளியில் குப்பைக் கொட்டுவதை தவிர்த்து குப்பை தொட்டிகளை பயன்படுத்துமாறும், தேவையற்ற கழிவுகளை குப்பைத் தொட்டியில் மட்டுமே கொட்ட வேண்டும் எனவும் உத்தரவிட்டார். கொட்டும் மழையிலும் பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ததை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
இதையும் படிங்க: மாமல்லபுரத்தில் செங்கல்பட்டு ஆட்சியர் திடீர் ஆய்வு!