விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் சிவஞான போதகத்தை உலகுக்கு உணர்த்திய மெய்கண்டாரின் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தன்று குருபூஜை நடப்பது வழக்கம். அதன்படி, இன்று (28.10.2019) காலை 8 மணிக்கு திருமுறை விண்ணப்பத்துடன் குருபூஜை நிகழ்ச்சி தொடங்கியது.
![gurupoojai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20191028-wa00861572271408019-45_2810email_1572271419_1042.jpg)
அதைத் தொடர்ந்து 9 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் மதியம் 12 மணிக்கு மெய்கண்டாருக்கு தீபாராதனை, குருபூஜைகளும் நடைபெற்றன. பின்னர், 1 மணிக்கு நடைபெற்ற ஆன்மிக சிறப்பு சொற்பொழிவில், சென்னை, மதுரை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
![gurupoojai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20191028-wa00851572271408020-7_2810email_1572271419_428.jpg)
அப்போது மெய்கண்டார் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், குருபூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை விருந்து, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.