இதுதொடர்பாக மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா வைரஸ் நோய் பெருந்தொற்று காரணத்தினால் நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நலன் கருதி, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வருகிற 14ஆம் தேதி (சனிக்கிழமை) அமாவாசை தினத்தன்று மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் அன்றைய தினம் அங்காளம்மன் திருக்கோயிலில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனைத்து விதமான தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது என திருக்கோயில் நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த்திருவிழா