ETV Bharat / state

காதல் தோல்வியால் விரக்தி; முதல் மாடியில் இருந்து விழுந்த முதலாம் ஆண்டு மாணவி!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி காதல் தோல்வியால் முதல் மாடியில் இருந்து விழுந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

author img

By

Published : Jul 25, 2022, 6:12 PM IST

காதல் தோல்வியால் விரக்தி; முதல் மாடியில் இருந்து விழுந்த முதலாம் ஆண்டு மாணவி

விழுப்புரம்: விக்கிரவாண்டி தனியார் கல்லூரியில் பார்மசி பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி முதல் மாடியில் இருந்து விழுந்தார். அவர் சிகிச்சைக்காக உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை செய்து வந்தனர்.

மாணவி அணிந்திருந்த உடையில் அவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் அவர் ஒருவரை காதலித்ததாகவும், காதல் தோல்வி விரக்தியில்தான் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாகவும்; தன்னை மன்னித்து விடுங்கள் அப்பா அம்மா என்று எழுதி உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அவர் படிக்கும் வகுப்பறையின் பெஞ்சில், காதலனின் பெயரையும் எழுதி உள்ளதாகவும் காவல் துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தனிப்படை விசாரணை: திண்டிவனம் ஏஎஸ்பி அபிஷேக் குப்தா, விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட உள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கல்லூரி மாணவிக்கு விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடத்த மருத்துவர்கள் முடிவு செய்து அறுவை சிகிச்சைக்குத் தயாராகி வருவதாகவும் தகவல் வந்துள்ளது.

இந்நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்புப்பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: திருவள்ளூர் அருகே விடுதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.