ETV Bharat / state

சம்பளம் பிடித்தம் செய்யக் கூடாது - போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - villupuram district news

விழுப்புரம்: போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தினர் சம்பளம் பிடித்தம் செய்யக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Nov 2, 2020, 4:16 PM IST

விழுப்புரம் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தினர் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது மாத ஊதியம் உடனடியாக வழங்கப்பட வேண்டும், பாதுகாப்பு விதிமுறைகளுடன் பேருந்துகளை இயக்க வேண்டும், பேரிடர் காலத்தில் ஊழியர்களுக்கு நெருக்கடி தரக்கூடாது, பேருந்துகள் முழுமையாக இயங்காத நிலையில் சம்பளம் பிடித்தம் செய்யக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் அவர்கள் பொது மேலாளரைச் சந்திக்க உள்ளே செல்ல முற்பட்டபோது காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் தொழிலாளர்கள் பொது மேலாளரைக் கண்டித்தும், காவல் துறையைக் கண்டித்தும் முழக்கமிட்டனர். மேலும் ஒப்பாரி வைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறுகையில், "பொது மேலாளரைச் சந்தித்துப் பேசும் வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும். உடனடியாக எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

போராட்டம் நடத்துவதாக ஏற்கனவே அறிவிப்பு செய்தும் காவல் துறையினர் எங்களை அத்துமீறி தடுக்கின்றனர்" எனக் குற்றஞ்சாட்டினர்.

இதையும் படிங்க: சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.