ETV Bharat / state

பொன்முடி மகனுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியா?...சிவி. சண்முகம் கேள்வி - ex minister CV Shanmugam

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகனுக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை கொடுத்த போது எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், இன்று பொன்முடி மகனுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தில் பதவி கொடுக்கும்போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொன்முடி மகனுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியா

author img

By

Published : Nov 7, 2022, 12:28 PM IST

Updated : Nov 7, 2022, 12:51 PM IST

விழுப்புரம்: வானூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று(நவ.06) அதிமுகவின் 51-ஆவது தொடக்கவிழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. சண்முகம் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் பால் விலை ஒரே நாளில் 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 40 சதவிகித அளவிற்குப் பால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

திமுக அரசு மக்களைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் தானும், தன் குடும்பம் மட்டுமே வாழ வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் கனவு காண்கிறார். அமித்ஷா மகனுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் தலைவர் பதவியைக் கொடுத்த போது அச்சமயம் எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், இப்பொழுது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவி கொடுக்கும் பொழுது ஏன் மொளம் காக்கிறார்கள். பொன்முடி மகனுக்கு எப்படி பதவி கொடுத்தார்கள் என கேள்வி எழுப்பினால், அதற்கு அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை.

திமுகவை தொடர்ந்து விமர்சிக்கும் முன்னாள் அமைச்சர்

அதுபோன்று கோவை குண்டுவெடிப்பைப் பற்றி இதுவரை முதலமைச்சர் ஸ்டாலின் வாய் திறக்கவே இல்லை. முதலமைச்சரின் மௌனம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. அரசு செயல்படாமல் இருந்தால் அதனை சுட்டிக் காட்டுவது தான் ஆளுநரின் கடமை.

தமிழ்நாடு அரசு செயல்படாமல் இருப்பதை ஆளுநர் சுட்டிக்காட்டினால், உடனடியாக ஆளுநரை மாற்ற வேண்டும் என்றும், பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையை மிரட்டுவது போன்று தற்போது ஆளுநருக்கும் மிரட்டல் விடும் வேலைகளைச் செய்கிறார்கள். இதன் மூலம் திமுக அரசு தன்னுடைய கையாலாகாத தனத்தை வெளிப்படையாகக் காட்டி வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: "அடுத்த தேர்தலுக்கு பிறகு திமுக மட்டுமே நிலைத்து இருக்கும்" ...துரைமுருகன்

Last Updated : Nov 7, 2022, 12:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.