விழுப்புரம்: கலைஞர் அறிவாலயத்தில் சிபிஎம் கட்சியியின் மண்டல பேரவைக்கூட்டம் இன்று (மே 16) அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், ’கடந்த அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் 13 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், ஒரு போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்தபோது, 3 போலீசாரை உடனடியாக கைது செய்தது திமுக ஆட்சி. சட்டம், ஒழுங்கை காப்பதில் திமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது’ என சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் பின்னலாடை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உடனடியாக தமிழ்நாடு அரசு மத்திய அரசை நிர்பந்தப்படுத்தி, பருத்தி உற்பத்தியை சீரான முறையில் கொள்முதல் செய்ய வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெளிச்சத்திற்கு வராத பல ஜெய்பீம் கதைகள்; போலீசாரின் சித்ரவதைக்குத் தொடர்ந்து ஆளாகும் வேதனை நிறைந்த ஆதிப்பழங்குடியின சமூகம்!