ETV Bharat / state

காஷ்மீர் மக்கள் உணர்வுகளின் மீது கொடூர தாக்குதல்!

விழுப்புரம்: காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்த பாஜக அரசு அம்மக்களின் உணர்வுகளின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்

cpm balakrishnan press meet
author img

By

Published : Aug 6, 2019, 5:03 PM IST

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யும் மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது " இந்தியாவின் பன்மைத்துவத்தை குலைக்கும் வகையிலும் மாநில அதிகாரங்களை பறிக்கும் வகையிலும் பல்வேறு சட்ட திருத்தங்களை நாடாளுமன்றத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு நிறைவேற்றிவருகிறது.

இந்நிலையில் நேற்று காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யும் மசோதாவை நிறைவேற்றியிருக்கிறது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்செயல் காஷ்மீர் மக்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு விடுத்த சவால். இது ஒரு ஜனநாயகப் படுகொலை. இதனைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.

balakrishnan press meet
கே.பாலகிருஷ்ணன் செய்தியாளரை சந்தித்த போது

பாஜக அரசின் அனைத்து செயல்களுக்கும் அதிமுக அரசு ஆதரவளித்து பாஜகவின் மறுபதிப்பாக விளங்குகிறது. வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” என்றார்.

Intro:விழுப்புரம்: காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அம்மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Body:இதுத்தொடர்பாக விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது.,

'மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு இந்திய பண்பாடு, பாரம்பரியம், பன்முகத்தன்மை எல்லாம் பறித்து அடுக்கடுக்கான அவசர சட்ட திருத்தங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி வருகிறது.

காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றியிருப்பது இந்திய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த செயல் காஷ்மீர் மக்கள் மீதான கொடூர தாக்குதல். ஜனநாயகப் படுகொலை, இந்திய கூட்டாட்சிக்கு விடப்பட்டுள்ள மிகப்பெரிய சவால்.

மோடி தலைமையிலான பாஜக அரசு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து பொது மக்களின் கவனத்தை திசை திருப்பவே காஷ்மீர் மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

பாஜக அரசின் அனைத்து செயல்களுக்கும் அதிமுக ஆதரவு தெரிவித்து வருகிறது. அதிமுக பாஜகவின் மறுபதிப்பாக உள்ளது.

தேசிய கல்வி கொள்கை சாதாரண மக்களின் கல்வி உரிமையை தட்டிப்பறித்து அழித்துவிடும். வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் சட்டவிரோத செயலில் அதிமுக அரசு ஈடுபட்டு வந்தது.

இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்' என்று கூறினார்.

Conclusion:இந்த சந்திப்பின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.