விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து திரும்பிய 500க்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதையடுத்து மே 8ஆம் தேதி (நேற்று) வரை மொத்தம் 226 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர்.
தற்போது புதிதாக 67 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 293ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் விழுப்புரம் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, கோயம்பேடு சந்தையிலிருந்து விழுப்புரம் மாவட்டத்துக்குத் திரும்பியவர்கள் திண்டிவனம், கப்பியாம்புலியூர், செஞ்சி, அரசூர் பகுதிகளில் உள்ள தனியார், அரசுக் கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓரம் போ, ஓரம் போ கரோனா ஸ்கேட்டிங் வருது.... விழுப்புரத்தில் நூதன விழிப்புணர்வு!