விழுப்புரம் மாவட்டம் கம்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாஸ்மின் பேகம் (26). இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த இவரும், விழுப்புரம் அருகேயுள்ள வளவனூர் பகுதியைச் சேர்ந்த இந்து - வன்னியர் பிரிவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரும் கடந்த ஒன்பது ஆண்டுகளாகக் காதலித்துவந்துள்ளனர்.
இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால், இன்று இருவரும் தங்களது நண்பர்கள் துணையுடன், மயிலம் முருகன் கோயிலில் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.
தொடர்ந்து, மதத்தின் பெயரால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே தங்களது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் விழுப்புரம் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
ரம்ஜான் தினத்தில் இஸ்லாமியப் பெண் ஒருவர் தனது காதலரைக் கரம் பிடித்ததுடன், பாதுகாப்புக் கேட்டு காவல் நிலையத்தை அணுகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : கரோனாவுக்கு நடுவில் கல்யாணம் செய்துகொண்ட அமெரிக்கர்கள்!