விழுப்புரம்: புதிய பேருந்து நிலையம் எதிரே ஆவின் பாலகம் உள்ளது. நேற்று (மே.4) இரவு விழுப்புரம் நகராட்சி 42ஆவது வார்டு உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுந்தர் ராம், விழுப்புரம் நகராட்சி ஒப்பந்ததாரர் விஜி, அவரது நண்பர்கள் மதுபோதையில் ஆவின் பாலகத்தில் சிகரெட் கேட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களிடம் சிகரெட் விற்பனை இல்லை என ஊழியர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். 'சிகரெட் இல்லாமல் எதற்கு ஆவின் பாலகம் நடத்துகிறீர்கள்' எனக்கேட்டு சுரேஷ் ராம், அவரது நண்பர்கள் ஊழியர்களை தாகாத வார்த்தைகளால் பேசி மதுபாட்டிலை கொண்டு தாக்கியுள்ளனர்.
இது குறித்து கடையின் உரிமையாளர் சுந்தர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்த கடையை திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டணும் - ஆலோசனை கூறும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர்!