ETV Bharat / state

விழுப்புரத்தில் முழு வீச்சில் கரோனா தடுப்பு பணி- ஆட்சியர் - விழுப்புரத்தில் முழுவீச்சில் கரோனா தடுப்பு பணி

விழுப்புரம்: மாவட்ட அளவில் கரோனா தடுப்பு பணிகள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டுவருவதாக மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Corona prevention measures taken full fledged in villupuram said collector annadurai
author img

By

Published : Jun 19, 2020, 3:54 PM IST

கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அரைமணி நேரத்தில் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது தொடர்பான சிறப்பு குழு கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, "விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 505 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 379 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை இந்த தொற்று பாதிக்கப்பட்டு 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 106 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1,200 முதல் 1,300 பேர்வரை கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றனர். கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

கரோனா பாதித்தவர்களை கண்டறிந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக வட்டார அளவில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்றவர்களிடமிருந்து ரூ. 8 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த தொடர் கண்காணிப்பு பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

மக்கள் பொது இடங்களில் கைகளை கழுவுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கபசுரக் குடிநீர், சத்து மாத்திரை தொடர்ந்து வழங்கப்படுகிறது.

மாவட்ட அளவில் கரோனா தடுப்பு பணிகள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டுவருகிறது. வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் விழுப்புரம் மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு, முகாம்களில் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட பின்னரே வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அளவு படுக்கை வசதிகள் உள்ளன. மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோரை தங்கவைக்கும் அளவிற்கு வசதி உள்ளது" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.