ETV Bharat / state

விழுப்புரத்தில் அரைசதம் அடித்தது கரோனா! பொதுமக்கள் பீதி - விழுப்புரம் கரோனா

விழுப்புரம்: மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50ஐ எட்டியுள்ளதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

corona villupuram
corona villupuram
author img

By

Published : Apr 29, 2020, 9:51 PM IST

தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஏற்கனவே 48 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இன்று விழுப்புரம் லஷ்மி நகரில் வசித்து வரும் மருத்துவர் கைலாஷ் (30) என்பவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் விழுப்புரம் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையில், கிருஷ்ணகிரியில் உள்ள தனது மனைவி மற்றும் உறவினர்களைச் சந்திக்க கைலாஷ் கடந்த வாரம் கிருஷ்ணகிரி சென்றுள்ளார். இதையடுத்து அவரது உறவினர்களுக்கு மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேபோல், விழுப்புரம் அருகேயுள்ள வடகுச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர், சென்னை கோயம்பேடு சந்தையில் கீரை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டது. முடிவில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், விழுப்புரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் 50ஐ எட்டியுள்ளது. விழுப்புரத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா தொற்றால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: என் பள்ளி மாணவர்கள் பசியில் வாடக்கூடாது - தலைமை ஆசிரியையின் மனித நேயம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.