தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் தேமுதிக குறித்தும் அக்கட்சியின் தலைமை குறித்தும் விமர்சிக்கும் வகையில் பிரபல தினசரி நாளிதழ் ஒன்று கார்ட்டூன் வெளியிட்டிருந்தது.
இந்தக் கார்ட்டூன் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பத்திரிகை உரிமையாளர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டிவனம் நகர தேமுதிக செயலாளர் காதர் பாஷா தலைமையில் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.