ETV Bharat / state

குடிமராமத்து பணி; ஆட்சியர் ஆய்வு - Villupuram

விழுப்புரம்: விக்கிரவாண்டி வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் நேரில் சென்று பார்வையிட்டார்.

குடிமராமத்து பணி
author img

By

Published : Aug 13, 2019, 8:04 AM IST

தமிழ்நாடு அரசின் உத்தரவில் ரூ.499 கோடி மதிப்பில் 29 மாவட்டத்திற்குட்பட்ட 1,829 ஏரிகளில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள், நீர்வள ஆதார துறையினரால் திட்டமிடப்பட்டு விவசாய சங்கங்கள், ஆயக்கட்டுதாரர்கள், பயன்பாட்டாளர் சங்கங்கள் மூலமாக செயல்படுத்தப்படும்.

குடிமராமத்து பணி
குடிமராமத்து பணி

இத்திட்டத்தின்படி, விழுப்புரம் மாவட்டம் அரியலூர் திருக்கை ஏரியில் பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளில் ஏரியின் கரையில் உள்ள முட்புதர்களை அகற்றுதல், கரையை பலப்படுத்துதல், மதகு சீர்செய்தல், தடுப்புச்சுவர் அமைத்தல், வரத்து வாய்க்கால் தூர் வாருதல், ஆக்கிரமிப்பை அகற்றி எல்லைக் கற்கள் நடுதல் போன்றவற்றை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார்.

குடிமராமத்து பணி
குடிமராமத்து பணி

அதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டி வட்டம் அனுமந்தபுரம் ஏரியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டிலும், அன்னியூர் ஏரியில் 45 லட்சம் மதிப்பீட்டிலும், கருவாச்சி ஏரியில் 25 லட்சம் மதிப்பீட்டிலும் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

குடிமராமத்து பணி
குடிமராமத்து பணி

அப்போது, கரையின் இருபுற எல்லைகளை கண்டறிந்து அகலப்படுத்துவதோடு வரத்து வாய்க்கால்களை ஆழப்படுத்தி தூர்வார வேண்டும் எனவும், இப்பணிகளை மழைக்காலத்துக்கு முன்பாக விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அலுவலர்கள், விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

Intro:விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Body:தமிழக அரசின் உத்தரவில் ரூபாய் 499 கோடி மதிப்பில் தமிழ்நாட்டில் உள்ள 29 மாவட்டத்திற்குட்பட்ட 1,829 ஏரிகளில் குடி மராமத்து பணிகளை மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த குடிமராமத்து பணிகள் நீர்வள ஆதார துறையினரால் திட்டமிடப்பட்டு விவசாய சங்கங்கள், ஆயக்கட்டுதாரர்கள், பயன்பாட்டாளர் சங்கங்கள் மூலமாக செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தில் வரத்து வாய்க்கால் தூர்வாருதல், மதகுகளை சீரமைத்தல், கலுங்கல்கள் சீரமைத்தல், ஏரிக்கரையை பலப்படுத்துதல் மற்றும் அணைக்கட்டுகள் சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 6,974 எக்டேர் ஆயக்கட்டு நிலம் பாசன வசதி மேம்படுத்தப்படும்.

இத்திட்டத்தின்படி இன்றைய தினம் விழுப்புரம் மாவட்டம் அரியலூர் திருக்கை ஏரியில் பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளில் ஏரியின் கரையில் உள்ள முட்புதர்களை அகற்றுதல், கரையை பலப்படுத்துதல், மதகு சீர்செய்தல், தடுப்புச்சுவர் அமைத்தல், வரத்து வாய்க்கால் தூர் வாருதல், ஆக்கிரமிப்பை அகற்றி எல்லைக் கற்கள் நடுதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு ரூ. 29 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டி வட்டம் அனுமந்தபுரம் ஏரியில் ரூபாய் 22 லட்சம் மதிப்பீட்டிலும், அன்னியூர் ஏரியில் 45 லட்சம் மதிப்பீட்டிலும், கருவாச்சி ஏரியில் 25 லட்சம் மதிப்பீட்டிலும் நடைபெற்றுவரும் குடிமராமத்து பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது கரையின் இருபுற எல்லைகளை கண்டறிந்து அகலப் படுத்துவதோடு வரத்து வாய்க்கால்களை ஆழப்படுத்தி தூர்வார வேண்டும் எனவும், இப்பணிகளை மழைக்காலத்துக்கு முன்பாக விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Conclusion:இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை கீழ் பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஜவகர் உதவி செயற்பொறியாளர் அன்பரசன் மற்றும் வட்டாட்சியர்கள் உடன் இருந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.