ETV Bharat / state

நாமக்கல்லில் கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனை தொடங்கிவைப்பு!

நாமக்கல்: தீபாவளி பண்டிகையையொட்டி நாமக்கல் கோ-ஆப்டெக்ஸில் சிறப்பு விற்பனையை ஆட்சியர் தொடங்கிவைத்தார். 95 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கோ-ஆப்டெக்ஸ்
கோ-ஆப்டெக்ஸ்
author img

By

Published : Oct 20, 2020, 2:21 PM IST

நாமக்கல்லில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.

இதையொட்டி இன்று நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் கலந்து கொண்டு, சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். நவம்பர் மாதம் வரை நடைபெறும் சிறப்பு விற்பனையில் பருத்தி மற்றும் புதிய ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடியும், விசைத்தறி ரகங்களுக்கு 20 சதவீதம் சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அசல் ஜரிகையுடன் காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் 5 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் விற்பனைக்கு உள்ளன. ஆரணி பட்டுப் புடவைகள், மென் பட்டுப் புடவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கோ-ஆப்டெக்ஸ்
கோ-ஆப்டெக்ஸ் உடைகள்

மேலும் அனைத்து ரக காட்டன் புடவைகள், ஆர்கானிக், களம்காரி காட்டன் புடவைகள் குறைந்த விலையில் நேர்த்தியான வண்ணங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர், "இவ்வாண்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் 95 லட்ச ரூபாய் அளவிற்கு விற்பனை செய்ய, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இங்கு துணிகளை வாங்கி நெசவாளர்களுக்கு உதவிட வேண்டும், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்வதோடு, கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னரே கடைக்குள் அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.