ETV Bharat / state

இரும்புக்கடையில் ரூ. 1 லட்சம் ரொக்கம், 2 சவரன் நகை திருட்டு: சிக்கிய சிசிடிவி காட்சி! - இரும்பு கடை கொள்ளை சிசிடிவி காட்சி

விழுப்புரம்: இம்மாதம் 19ஆம் தேதி பெரியசெவலை கிராமத்தில் அமைந்துள்ள இரும்பு கடையில் ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு சவரன் மோதிரத்தை மர்ம நபர் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

திருவெண்மெய் நல்லூர் இரும்புக்கடை கொள்ளை  இரும்பு கடை கொள்ளை சிசிடிவி காட்சி  thiruvennainallur steel shop theft cctv footage
இரும்புக்கடையில் ஒரு லட்சம், இரண்டு சவரன் திருட்டு: சிசிடிவி காட்சி சிக்கியது
author img

By

Published : Dec 24, 2019, 12:51 PM IST

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலை கிராமத்தில் மாலிக் பாஷா என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு ஸ்டீல் எனும் பெயரில் இரும்பு கம்பி கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி இரவு இவரது கடையின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புச் சுவரை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர் ஒருவர் கல்லா பெட்டியில் வைத்திருந்த 80 ஆயிரம் ரூபாய் பணம், இரண்டு சவரன் மோதிரம் மற்றும் ஏடிஎம் அட்டை உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளார்.

இரும்புக்கடையில் திருட்டு: வெளியான சிசிடிவி

மேலும், திருடிய ஏடிஎம் அட்டையைக் கொண்டு ஸ்டீல் கடையின் அருகில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றுள்ளார். மொத்தமாக ஒரு லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டது குறித்து திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில், கொள்ளை சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. வெளியான சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: திமுக பேரணியில் பர்ஸை இழந்த சுப. வீரபாண்டியன்!

Intro:tn_vpm_02_thiruvennainallur_theft_cctv_vis_tn10026Body:tn_vpm_02_thiruvennainallur_theft_cctv_vis_tn10026Conclusion:விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே இரும்பு கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூர் அருகே உள்ள கிராமம் பெரியசெவலை. இந்த கிராமத்தில் மாலிக் பாஷா என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு ஸ்டீல் எனும் பெயரில் இரும்பு கம்பி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 19ம் தேதி இரவில் அவரது கடையின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு சுவரை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர் ஒருவர் கல்லா பெட்டியில் வைத்திருந்த 80,000 ரூபாய் பணம், 2 பவுண் தங்க மோதிரம் மற்றும் ATM கார்டை எடுத்து சென்றுள்ளான்.

ATM கார்டைக் கொண்டு அருகில் உள்ள ATM இயந்திரத்தில் 20,000 ரூபாய் பணத்தை எடுத்து சென்றுள்ளன். மொத்தமாக 1 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 2 பவுண் மோதிரம் திருடு போன நிலையில் இது குறித்து திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் கொள்ளை சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

சிசிடிவி காட்சிகள் கொண்டு போலிசார் விசாரணையை தீவிர படுத்தி உள்ளனர்..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.