ETV Bharat / state

ஊரடங்கு விதிகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் - Cars operated amidst lock down seized by police at Villupuram

விழுப்புரம் : ஊரடங்கின் மத்தியில் உரிய அனுமதியின்றி இயக்கப்பட்ட 46 வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

author img

By

Published : May 20, 2020, 11:23 AM IST

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதத்தில் நாடு முழுவதும் வருகிற மே 31ஆம் தேதி வரை நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதில், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், சில தளர்வுகளுடன் ஊரடங்கு விதிகள் இன்றுவரை கடுமையாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

இதில் குறிப்பாக அனைத்து வித போக்குவரத்துகளும் மாநிலம் முழுவதும் மே 31ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், விழுப்புரத்தில் நேற்று அனுமதியின்றி இயக்கப்பட்ட 46 வாகனங்களை காவல் துறையினர் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனர்.

அப்போது, உரிமையாளர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு காகுப்பம் ஆயுதப்படை மைதானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஊரடங்கு விதிகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : சிறப்பு ரயில் மூலம் விழுப்புரம் வந்த தொழிலாளர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.