கள்ளக்குறிச்சி மாவட்டம் விருதாவூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (51). புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த 13ஆம் தேதி விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று தான் அணிந்திருந்த ஆடையால் மருத்துவமனையின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த விக்கிரவாண்டி காவல்துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: பணியிலிருந்த செவிலியர் தற்கொலை! காரணம் என்ன?