சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் விழுப்புரம் ஆரம்பநிலை பரிசோதனை மையம் ஆகியவை இணைந்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இலவச புற்றுநோய் விழிப்புணர்வு பரிசோதனை முகாமை நடத்தியது. இந்த முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
இதில் ஆண்களுக்கு வாய் புற்றுநோய் பரிசோதனை, பெண்களுக்கு மார்பக புற்றுநோய், கருப்பை, வாய் புற்றுநோய் பரிசோதனையும் செய்யப்பட்டது.
இந்த முகாமில் மாவட்ட காவல் காண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்கள், பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். தொடர்ந்து முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: ஈரோட்டில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்