விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி என்பவரது மகன் கதிரவன் (14). அதே கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவந்தான்.
இந்நிலையில் இன்று சிறுவன் தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது ராஜி என்பவர் கூரை வீட்டின் மண் சுவர் திடீரென சரிந்து தலையில் விழுந்ததில் சிறுவன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து நல்லான்பிள்ளை பெற்றாள் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் உடல் உடற்கூராய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
தாய் தகப்பன் இருவரும் வெளியூரில் வேலை செய்துவரும் நிலையில், தனது தாத்தா வீட்டில் தனியாக வசித்து வந்த சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.