விழுப்புரம் மாவட்டத்தில், மே 3ஆம் தேதிவரை மொத்தம் 86 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக கோயம்பேடு சந்தையிலிருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு திரும்பியவர்களில் 418 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் 49 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 135ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் விழுப்புரம் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கோயம்பேட்டில் இருந்து பரவிய கரோனா!