ஆண்டுதோறும் அரசு சார்பில் சாலைப் பாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி விழுப்புரத்தில் 31ஆவது சாலை பாதுகாப்பு வாரவிழா நேற்றுமுதல் வருகிற 27ஆம் தேதிவரை கொண்டாடப்படுகிறது.
இதில் ஒவ்வொரு நாளும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் பல்வேறு விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
முதல்கட்டமாக நேற்று ஆண்கள், பெண்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று சாலைவிதிகளைக் கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் கல்லூரி மாணவர்கள், அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
இதனை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
காவலர் பயிற்சி மைதானத்தில் தொடங்கிய இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது.
இதையும் படிங்க:'வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுங்க' - கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு