விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த திருவக்கரை பகுதியில் வசிப்பவர் கற்பகம் (35). இவர் கூலி தொழில் செய்துவருகிறார். இவருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் நாகவள்ளி (14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் பெண் குழந்தை உள்ளது.
கற்பகத்தின் கணவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பின்னர், கற்பகத்திற்கு ஆட்டோ ஓட்டுநர் சுந்தரமூர்த்தி (40) என்பவருடன் திருமணத்தைத் தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கற்பகம் தன் மகள், சுந்தரமூர்த்தியுடன் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
பாலியல் வன்புணர்வு
இந்நிலையில், கற்பகம் வீட்டில் இல்லாதபோது அடிக்கடி சுந்தரமூர்த்தி சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து யாரிடமாவது கூறினால், சிறுமியை கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். நாளடைவில் சுந்திரமுர்த்தியின் பாலியல் தொல்லை அதிகரிக்கவே, தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி கற்பகத்திடம் கூறியுள்ளார்.
கைது
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கற்பகம், இது தொடர்பாக கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குபதிந்து சுந்திரமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர். தந்தை ஸ்தானத்தில் இருந்த ஒருவரே மகளை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த டெம்போ டிரைவர் போச்சோவில் கைது!